ஜார்க்கண்ட் முதல் மந்திரி வீட்டில் 144 தடை உத்தரவு

January 30, 2024

ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் நில மோசடி மற்றும் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததன் காரணமாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரி ஹேமந்த் சோரன் நில மோசடி மற்றும் பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் மாற்றத்தை செய்திருப்பதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் கடந்த 20ஆம் தேதி அவரிடம் நடத்தப்பட்ட 7 மணி நேர விசாரணையில் பல்வேறு […]

ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் நில மோசடி மற்றும் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததன் காரணமாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரி ஹேமந்த் சோரன் நில மோசடி மற்றும் பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் மாற்றத்தை செய்திருப்பதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் கடந்த 20ஆம் தேதி அவரிடம் நடத்தப்பட்ட 7 மணி நேர விசாரணையில் பல்வேறு கேள்விகள் கேட்டு அதனை வீடியோவாக அமலாக்கத்துறையினர் பதிவு செய்தனர். இதில் ஹேமந்த் சோரன் தெரிவித்த தகவல்கள் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்த முடிவெடுக்கப்பட்டிருந்தது. அதற்காக அவருக்கு அடுத்தடுத்து 8 சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் ஜனவரி 29ம் தேதி எனது 31ஆம் தேதி வீட்டிற்கு வருவதாக அமலாக்க துறையினர் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ஹேமந்த் சோரன் கடந்த சனிக்கிழமை டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. தற்போது அவரை தொடர்பு கொள்ள நினைத்தபோது அனைத்து எண்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளன. இவர் எங்கு சென்றார் என்பது இதுவரை தெரியவில்லை இவரை தேடிக் கொண்டிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக 144 தடை உத்தரவு போடப்பட்டு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu