திருப்பதியில் ஓராண்டில் ரூ.1,450 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.
இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா கூறுகையில், வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் வழியாக 6.6 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். உண்டியலில் ரூ.39.40 கோடி காணிக்கையாக கிடைத்தது. 2022 ஜனவரி முதல் டிசம்பர் வரை 2.37 கோடி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உண்டியலில் ரூ.1,450.41 கோடி காணிக்கை கிடைத்தது. மேலும் 11.54 கோடி லட்டு விற்கப்பட்டது என்றும், 4.77 கோடி பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.