கனடா நாட்டில், பீல் மற்றும் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் தொடர்ச்சியாக சரக்கு திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. இதில் ஈடுபட்டு வந்த 15 இந்தியர்களை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிலர், சரக்குகளை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களை இடைமறித்து, திருட்டு குற்றத்தில் ஈடுபட்டு வந்ததாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், காவல்துறை சிறப்பு படையினர் விசாரணை செய்து வந்தனர். விசாரணையில் குற்றத்தில் ஈடுபட்ட 15 பேர் பிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 73 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடமிருந்து 9 மில்லியன் டாலர் மதிப்பிலான திருட்டுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.