தரமற்ற மருந்துகள் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தாகும் என்பதால், கர்நாடக அரசு பல முக்கிய மருந்துகளை தடை செய்துள்ளது. இந்த மருந்துகளை வாங்கவோ, சேமிக்கவோ கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை, தரமற்றதாக கருதப்படும் 15 வகை மருந்துகள் மற்றும் மாத்திரைகளுக்கு தடை விதித்துள்ளது. இதில் 'பாராசிட்டமல்-650', ரிங்கர்க் லேக்டேட் ஊசி, விட்டமின் மாத்திரைகள், சிரப்புகள், குணப்படுத்தும் ஊசிகள் உள்ளிட்டவை அடங்கும். இந்த மருந்துகள் பல்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை, இந்த மருந்துகளை ஆஸ்பத்திரிகள், மருந்தகங்கள் மற்றும் கிடங்குகளில் விற்பனையோ சேமிப்போ செய்யக் கூடாது என்றும், பொதுமக்கள் இவை பயன்படுத்தவே கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. மக்கள் சுய பாதுகாப்புக்காக இந்த எச்சரிக்கையை கடைபிடிக்க வேண்டும்.