தாம்பரம் மாநகராட்சியுடன் 15 பஞ்சாயத்துகள் இணைகிறது

September 29, 2023

தாம்பரம் மாநகராட்சிக்குள் புதிதாக 15 பஞ்சாயத்துக்கள் இணைகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு தாம்பரம் மாநகராட்சி புதிதாக உருவாக்கப்பட்டது. இது தற்போது 87.64 கிலோ மீட்டர் பரப்பளவு, 70 வார்டுகளுடன் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 10 லட்சம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அகரம்தென், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், கவுல்பஜார், முடிச்சூர்,பெரும்பாக்கம், நன்மங்களம், பொழிச்சலூர், திரிசூலம்,ஒட்டியம்பாக்கம், திருவஞ்சேரி, வேங்கைவாசல், மதுரப்பாக்கம், மூவரசம்பட்டு, சித்தாலப்பாக்கம் ஆகிய 15 பஞ்சாயத்துகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட மாவட்ட நிர்வாகம் […]

தாம்பரம் மாநகராட்சிக்குள் புதிதாக 15 பஞ்சாயத்துக்கள் இணைகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு தாம்பரம் மாநகராட்சி புதிதாக உருவாக்கப்பட்டது. இது தற்போது 87.64 கிலோ மீட்டர் பரப்பளவு, 70 வார்டுகளுடன் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 10 லட்சம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அகரம்தென், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், கவுல்பஜார், முடிச்சூர்,பெரும்பாக்கம், நன்மங்களம், பொழிச்சலூர், திரிசூலம்,ஒட்டியம்பாக்கம், திருவஞ்சேரி, வேங்கைவாசல், மதுரப்பாக்கம், மூவரசம்பட்டு, சித்தாலப்பாக்கம் ஆகிய 15 பஞ்சாயத்துகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் தாம்பரம் மாநகராட்சி மொத்த பரப்பளவு 115 சதுர கிலோமீட்டர் ஆக அதிகரிக்கப்பட உள்ளது. இந்த பஞ்சாயத்துக்களை இணைப்பதன் மூலம் புதிதாக மேலும் 6 லட்சம் பேர் இதற்குள் வருவார்கள். இதனால் அப்பகுதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை திட்டம்,சாலை வசதி ஆகியவை மேம்படும், பஞ்சாயத்துகள் இணைப்புக்கு பின் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்.2027 ஆம் ஆண்டு வரை மண்டல அலுவலர்கள் ஊராட்சிகளை நிர்வகிப்பார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu