கடந்த ஆண்டில் 15 ஆயிரம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள்

February 20, 2023

கடந்த ஆண்டில் 15 ஆயிரம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்து இந்தியா சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். டெல்லியில் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு சார்பில், 'அறிவியல் உரையாடல் 2023' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில் மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கூறுகையில், கடந்த ஆண்டில் மட்டும் நாடு முழுதும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உறுப்பு மாற்று […]

கடந்த ஆண்டில் 15 ஆயிரம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்து இந்தியா சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு சார்பில், 'அறிவியல் உரையாடல் 2023' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில் மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கூறுகையில், கடந்த ஆண்டில் மட்டும் நாடு முழுதும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆண்டுக்கு 27 சதவீதம் அதிகரித்துள்ளது. உறுப்பு மற்றும் திசு மாற்றுத்துறையில் சிறந்த நடைமுறைகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனைகளை அனைத்து தரப்பினரிடமிருந்து பெறுவதற்காகவே இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் வாயிலாக பரவலான விளம்பரம் செய்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த என்.ஜி.ஓ., எனப்படும் அரசு சாரா நிறுவனங்களை ஈடுபடுத்தலாம். இதன் வாயிலாக தற்போதுள்ள உள்ள உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க முடியும் என்று அவர் பேசினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu