நாடு முழுவதும் புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து சுகாதாரத்துறை தொடர்பான பல அறிவிப்புகளை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அது வருமாறு:- நமது நாட்டில் 2014-ம் ஆண்டு முதல் 157 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றுடன் இணைந்து புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிசோதனைக்கூடங்களில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், தனியார் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுவினர் ஆராய்ச்சி செய்வதற்கு அனுமதிக்கப்படும். மருந்து துறையில் ஆராய்ச்சியையும், கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிக்கும் புதிய திட்டம் சிறந்த மையங்கள் மூலம் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.