ஜப்பானில் தொடங்கிய 15வது இந்தியா-ஜப்பான் உச்சி மாநாடு

August 29, 2025

பிரதமர் மோடி ஜப்பான் பயணத்தில் – இரு நாடுகளின் கூட்டாண்மை, பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் கவனத்தில். 15வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாடு ஜப்பானின் டோக்கியோவில் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு டெல்லியில் இருந்து புறப்பட்டு ஜப்பான் சென்றடைந்தார். இது அவரது 8வது ஜப்பான் பயணமாகும். முக்கியமாக, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் அவர் முதன்முறையாக உச்சி மாநாட்டில் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பில் இரு […]

பிரதமர் மோடி ஜப்பான் பயணத்தில் – இரு நாடுகளின் கூட்டாண்மை, பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் கவனத்தில்.

15வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாடு ஜப்பானின் டோக்கியோவில் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு டெல்லியில் இருந்து புறப்பட்டு ஜப்பான் சென்றடைந்தார். இது அவரது 8வது ஜப்பான் பயணமாகும். முக்கியமாக, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் அவர் முதன்முறையாக உச்சி மாநாட்டில் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையேயான கூட்டாண்மை, பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் மக்களிடையிலான பரிமாற்றங்கள் குறித்து மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. அதேசமயம் பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கிய பிரச்சினைகளும் விவாதிக்கப்பட உள்ளன.

மோடியின் இந்த பயணம் இந்தியா-ஜப்பான் நீண்டகால நட்புறவை வலுப்படுத்தும் படியாகக் கருதப்படுகிறது. மேலும், அவர் அடுத்த கட்டமாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் சீனாவுக்கும் பயணம் செய்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். அங்கு பல நாட்டு தலைவர்களுடனும் அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu