மே 15 முதல் 26-ம் தேதி வரை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும். அதன்படி 2022-23ம் ஆண்டு ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த 8-ந் தேதி நடைபெற இருந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பொது மாறுதல் கலந்தாய்வு மே 15 முதல் 26ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.














