பாகிஸ்தானில் இரண்டு பழங்குடியின குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 16 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் வடமேற்கு பிராந்தியத்தில் நிலக்கரி சுரங்கப்பாதை எல்லை நிர்ணயம் செய்வதில் நேற்று சன்னி கேல் மற்றும் ஜர்குன் கேல் என்ற இரு சமூகத்தினருக்கு இடையே சண்டை ஏற்பட்டது. இதில் இருதரப்பினர் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்து தற்போது வரை உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் துப்பாக்கிச் சண்டையில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சன்னிகேல் மற்றும் ஜர்குன் கேல் பழங்குடியினருக்கு இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக மோதல் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.














