ஐஸ்லாந்தில் ஒரே நாளில் 1600 நில அதிர்வுகள்

July 6, 2023

ஐஸ்லாந்தில் நேற்று ஒரே நாளில் 1600 நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. ஐஸ்லாந்தில் தலைநகர ரெய்க்ஜாவிக்கை சுற்றியுள்ள பகுதியில் நேற்று 1,600 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த அதிர்வுகள் தலைநகர் பகுதியில் மிகப்பெரிய அளவில் உணரப்பட்டதாகவும், அது தொடரவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் நான்கு அதிர்வுகள் 4 ரிக்டர் அளவிற்கு மேல் இருந்தது. இதுவரை எரிமலை வெடிப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை, என்றாலும் ஒன்றிரண்டு நாட்களில் நிகழ்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. வடக்கு […]

ஐஸ்லாந்தில் நேற்று ஒரே நாளில் 1600 நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.

ஐஸ்லாந்தில் தலைநகர ரெய்க்ஜாவிக்கை சுற்றியுள்ள பகுதியில் நேற்று 1,600 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த அதிர்வுகள் தலைநகர் பகுதியில் மிகப்பெரிய அளவில் உணரப்பட்டதாகவும், அது தொடரவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் நான்கு அதிர்வுகள் 4 ரிக்டர் அளவிற்கு மேல் இருந்தது.

இதுவரை எரிமலை வெடிப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை, என்றாலும் ஒன்றிரண்டு நாட்களில் நிகழ்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. வடக்கு அட்லாண்டிக் கடலில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்தில் கடந்த 2021 மற்றும் 2022-ல் ரெய்க்ஜாவிக்கில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஃபக்ராடால்ஸ்ஃப்ஜால் மலை அருகே எரிமலை வெடிப்பு உண்டானது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu