லிபியாவில் இருந்து 163 அகதிகள் சிறப்பு விமான மூலம் வங்கதேசம் திரும்பினர்.
ஆப்பிரிக்க நாடான லிபியாவில் வங்காளதேசத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அகதிகளாக உள்ளனர். லிபியாவில் கிளர்ச்சி குழுக்கள் அதிகமாக செயல்படுகின்றன. மேலும் இங்கு கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதன் காரணமாக பலர் அங்கிருந்து கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளில் குடியேறுகின்றனர்.
இந்நிலையில், வங்கதேசத்தை சேர்ந்த அகதிகள் தங்களை மீட்க வேண்டும் என்றும், இடம்பெயர்வு செய்ய உதவுமாறு சர்வதேச அமைப்பிடம் கோரிக்கை விடுத்தனர். அதற்கான முயற்சியும் நடைபெற்று வந்தது. அதன்படி லிபியாவில் இருந்து 163 அகதிகள் சிறப்பு விமான மூலம் வங்கதேசம் திரும்பினர். இந்த சர்வதேச அமைப்பு இதுவரை லிபியாவில் இருந்த சுமார் 80 ஆயிரம் அகதிகள் வங்கதேசத்திற்கு திரும்புவதற்கு உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.