தேர்தலை முன்னிட்டு 17 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்

February 29, 2024

மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் 17 டிஎஸ்பிக்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு ஒரே இடத்தில் மூன்று வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி தற்போது தமிழகம் முழுவதும் 17 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் சென்னை திருமங்கலம் காவல் சரக உதவியாளர் பி. வரதராஜன் எம்கேபி நகருக்கும், கடலூர் மாவட்டம் நெய்வேலி உட்கோட்டை […]

மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் 17 டிஎஸ்பிக்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு ஒரே இடத்தில் மூன்று வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி தற்போது தமிழகம் முழுவதும் 17 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் சென்னை திருமங்கலம் காவல் சரக உதவியாளர் பி. வரதராஜன் எம்கேபி நகருக்கும், கடலூர் மாவட்டம் நெய்வேலி உட்கோட்டை டிஎஸ்பி சபியுல்லா சென்னை அண்ணாநகர் சரக உதவி ஆணையராகவும், திருச்சி கன்ட்ரோல்மென்ட் சரக உதவி ஆணையர் எஸ்.பாஸ்கர் புதுக்கோட்டை உட்கோட்ட டிஎஸ்பி ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று டிஜிபி சங்கர் மொத்தம் 17 டிஎஸ்பிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu