கடந்த மே மாதம் முதல் பிரேசில் நாட்டில் கனமழை பெய்து வருகிறது. பிரேசிலை பொறுத்தவரை இது பருவமழை காலம் என்றாலும், அதிகப்படியான மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ரியோ கிராண்டே டு சூல் மாகாணத்தில் அதி கனமழை பதிவாகியுள்ளது.
பிரேசில் நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 179 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் பலர் மாயமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களைத் தேடும் பணியில் பிரேசில் நாட்டின் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.