நாமக்கல்லில் முட்டை விற்பனையில் ரூ.180 கோடி நஷ்டம்

March 11, 2023

நாமக்கல்லில் முட்டை விற்பனையில் ஒரே மாதத்தில் ரூ.180 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறுகையில், வியாபாரிகள் நெக் விலையில் இருந்து குறைத்து முட்டை கொள்முதல் செய்வதால், பண்ணையாளர்களுக்கு ஒரே மாதத்தில் ரூ.180 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது. மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் அரசே முட்டை விலையை நிர்ணயம் செய்கிறது. அதேபோல் தமிழக அரசும் கொள்முதல், விற்பனை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்க […]

நாமக்கல்லில் முட்டை விற்பனையில் ஒரே மாதத்தில் ரூ.180 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறுகையில், வியாபாரிகள் நெக் விலையில் இருந்து குறைத்து முட்டை கொள்முதல் செய்வதால், பண்ணையாளர்களுக்கு ஒரே மாதத்தில் ரூ.180 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது. மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் அரசே முட்டை விலையை நிர்ணயம் செய்கிறது. அதேபோல் தமிழக அரசும் கொள்முதல், விற்பனை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். கோடை காலம் தொடங்கி உள்ளதால் மேலும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அரசு உடனடியாக இது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu