வெளியுறவுத்துறைக்கு 18050 கோடி - இலங்கைக்கு தனியாக 150 கோடி - பட்ஜெட் அறிவிப்பு

February 2, 2023

நேற்று வெளியிடப்பட்ட நாடாளுமன்ற பட்ஜெட் அறிக்கையில், வெளியுறவுத்துறைக்கு கடந்த ஆண்டை விட 4.64% கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2023-24 ஆம் நிதியாண்டில் 18050 கோடி ரூபாய் வெளியுறவுத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு தனியாக 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் அறிக்கையின் படி, பல்வேறு நாடுகளின் வளர்ச்சி திட்ட நிதி உதவியாக 5408 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டு பணிகளுக்காக 990 கோடி […]

நேற்று வெளியிடப்பட்ட நாடாளுமன்ற பட்ஜெட் அறிக்கையில், வெளியுறவுத்துறைக்கு கடந்த ஆண்டை விட 4.64% கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2023-24 ஆம் நிதியாண்டில் 18050 கோடி ரூபாய் வெளியுறவுத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு தனியாக 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் அறிக்கையின் படி, பல்வேறு நாடுகளின் வளர்ச்சி திட்ட நிதி உதவியாக 5408 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டு பணிகளுக்காக 990 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அண்டை நட்பு நாடு திட்டத்தின் படி, பூட்டான் நாட்டிற்கான மேம்பாட்டு திட்டங்களுக்கு 2400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது வெளியுறவுத் துறைக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில் 41.04% என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை, பூட்டான் தவிர, பிற நாடுகளுக்கும் இந்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மாலத்தீவுக்கு 400 கோடி, ஆப்கானிஸ்தானுக்கு 200 கோடி, ஈரானுக்கு 100 கோடி, நேபாளத்துக்கு 550 கோடி, மொரிசியஸுக்கு 460 கோடி, மியான்மருக்கு 400 கோடி, ஆப்பிரிக்க நாடுகளுக்கு 250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu