தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றி வரும் காவலர்கள் 1847 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. மேலும் இதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளது. இதில் ஒரு பகுதியாக 3 வருடங்களாக ஒரே இடத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் காவல்துறையில் காவல் உதவி ஆய்வாளர் முதல் ஏடிஜிபி வரையிலான அதிகாரிகள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்தால் பணி மாற்றம் செய்ய உத்தரவிட்டிருந்தது. மேலும் சொந்த மாவட்டத்தில் பணிபுரிந்தால் வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இவர்களுக்கான பட்டியல்களை மாநகர காவல் ஆணையர், சரக டிஐஜிகள், மண்டல ஐஜிகள் தயாரிக்க வேண்டும் என உத்தர. இதனை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் தலைமை காவலர்கள் முதல் நிலை காவலர்கள் உட்பட 1847 பேர் பணியிட மாற்றம் செய்து தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதில் சென்னையில் மட்டும் 340 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.