தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக நடைபெறுகிறது.
நாடு முழுவதும் பாராளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெறும். இதில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இன்று முதல் தபால் வாக்குகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நாளன்று பொது விடுமுறை அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.