11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கை அறிவிப்பு

August 8, 2025

மாணவர்களின் அழுத்தத்தை குறைத்து, 12-ம் வகுப்பு தேர்வுக்கான தயாரிப்பில் முழு கவனம் செலுத்த வழி வகுக்கும் முக்கிய முடிவு. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டார். இந்த புதிய கொள்கையின் முக்கிய அம்சமாக, இனி தமிழகத்தில் 11-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கே பொதுத்தேர்வு இருக்கும். கல்வி நிபுணர்கள் தெரிவித்ததாவது, 11-ம் வகுப்பு தேர்வு நீக்கப்பட்டதால், […]

மாணவர்களின் அழுத்தத்தை குறைத்து, 12-ம் வகுப்பு தேர்வுக்கான தயாரிப்பில் முழு கவனம் செலுத்த வழி வகுக்கும் முக்கிய முடிவு.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டார். இந்த புதிய கொள்கையின் முக்கிய அம்சமாக, இனி தமிழகத்தில் 11-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கே பொதுத்தேர்வு இருக்கும். கல்வி நிபுணர்கள் தெரிவித்ததாவது, 11-ம் வகுப்பு தேர்வு நீக்கப்பட்டதால், மாணவர்கள் மீது இருக்கும் மன அழுத்தம் மற்றும் படிப்பு அழுத்தம் குறையும். மேலும், 12-ம் வகுப்பு தேர்வுக்கான பாடங்களை ஆழமாகக் கற்றுக்கொண்டு, தேர்வில் சிறப்பாகப் பதிலளிக்க மாணவர்கள் போதிய நேரம் பெறுவார்கள். இந்த முடிவு, தமிழக கல்வி தரத்தை மேம்படுத்தும் ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu