உக்ரைன் போரில் இங்கிலாந்தை சேர்ந்த தன்னார்வ உதவி ஊழியர்கள் 2 பேர் பலி

உக்ரைன் போரில் இங்கிலாந்தை சேர்ந்த தன்னார்வ உதவி ஊழியர்கள் 2 பேர் பலியாகினர். உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 11 மாதங்களுக்கும் மேலாக போர் நடத்தி வருகிறது. வெளிநாடுகளை சேர்ந்த தன்னார்வ உதவி ஊழியர்கள் பலர் போருக்கு மத்தியில் உக்ரைனுக்கு சென்று அந்த நாட்டு மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கிறிஸ் பாரி மற்றும் ஆண்ட்ரூ பாக்சா ஆகிய இரு தன்னார்வ உதவி ஊழியர்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் […]

உக்ரைன் போரில் இங்கிலாந்தை சேர்ந்த தன்னார்வ உதவி ஊழியர்கள் 2 பேர் பலியாகினர்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 11 மாதங்களுக்கும் மேலாக போர் நடத்தி வருகிறது. வெளிநாடுகளை சேர்ந்த தன்னார்வ உதவி ஊழியர்கள் பலர் போருக்கு மத்தியில் உக்ரைனுக்கு சென்று அந்த நாட்டு மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கிறிஸ் பாரி மற்றும் ஆண்ட்ரூ பாக்சா ஆகிய இரு தன்னார்வ உதவி ஊழியர்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உக்ரைனில் தன்னார்வ பணிகளை மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக இவர்கள் இருவரும் போர் முனையில் சிக்கும் பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணிகளை செய்து வந்தனர். அந்த வகையில் கிழக்கு உக்ரைனின் சோலேடார் நகரில் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த கிறிஸ் பாரி, ஆண்ட்ரூ பாக்சா ஆகிய இருவரும் கடந்த 6-ந் தேதி திடீரென மாயமாகினர்.

இந்த நிலையில் அவர்கள் இருவரும் போரில் இறந்துவிட்டதாக அவர்களது குடும்பங்கள் தெரிவித்துள்ளன. சோலேடார் நகரில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர்களது கார் மீது பீரங்கி குண்டு வீசப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்த இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைனில் இங்கிலாந்து குடிமக்கள் யாரும் இருந்தால் உடனடியாக வெளியேற வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளது.

0
0
பகிர:
Ks-7 இஸ்ரேல் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருவதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர்க்களத்தில் இருக்கிறது. இதனால் காசா முழுவதும் உணவு, குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து செய்திகளையும் துண்டித்துள்ளது. தற்போது ஐந்தாவது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 24 மணி நேர அவசர சேவையை அறிவித்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இந்தியர்களுக்கான அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் அவர்களின் உறவினர்களுக்கு இங்கு வெளியுறவுத் துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 180011778797 இலவச எண் +91-11-23012113 +91-11-23014104 +91-11-23017905 +919968291988 Emergency-Helpline-Notification-for- Indians-in-Israel இந்திய அவசர உதவி எண், இஸ்ரேல் போர், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள்,Emergency Helpline Notification for Indians in Israel இந்தியா
1 2 3 830

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu