கர்நாடகா, ஹரியானா மாநிலங்களில் H3N2 இன்ஃப்ளூயன்ஸாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் புதிதாக H3N2 வகை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் வேகமாக பரவிவருவதாக கூறப்படுகிறது. இதுவரை 90 பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் துணை வகையான H1N1 வைரஸால் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் H3N2 வகை இன்ஃப்ளூயன்ஸாவால் பாதிக்கப்பட்ட கர்நாடகா, ஹரியானா ஆகிய மாநிலத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது வெப்பகாலம் தொடங்கியுள்ளதால் பெரும்பாலும் வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருவதால் மாநில அரசுகள் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.