ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயிலுக்கு 2 மாதம் இடைக்கால ஜாமின்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத் தலைவர் நரேஷ் கோயிலுக்கு மனிதாபிமான அடிப்படையில் இரண்டு மாதங்கள் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவன கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட நஸ்டத்தால் தனது செயல்பாட்டை நிறுத்தியது. அதனால் அப்போதைய தலைவர் ஆக இருந்த நரேஷ் கோயல் தனது பதவியை விட்டு விலகினார். இதனிடையே கனரா வங்கியில் பண மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து வங்கி சார்பில் நரேஷ் கோயலின் மீது புகார் கொடுக்கப்பட்டது. சட்ட […]

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத் தலைவர் நரேஷ் கோயிலுக்கு மனிதாபிமான அடிப்படையில் இரண்டு மாதங்கள் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவன கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட நஸ்டத்தால் தனது செயல்பாட்டை நிறுத்தியது. அதனால் அப்போதைய தலைவர் ஆக இருந்த நரேஷ் கோயல் தனது பதவியை விட்டு விலகினார். இதனிடையே கனரா வங்கியில் பண மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து வங்கி சார்பில் நரேஷ் கோயலின் மீது புகார் கொடுக்கப்பட்டது. சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதால் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது வயது மூப்பின் காரணமாக கடுமையான உடல் வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில் வழக்கு தொடர்பாக ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அவர் தனது உடல் நிலையை எடுத்துச் சொல்லி ஜாமின் வழங்க கூறினார். ஆனால் அப்போதும் அவருக்கு ஜாமின் வழங்கப்படவில்லை. அதனை அடுத்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை அடுத்து மனிதாபிமான அடிப்படையில் நரேஷ் கோயலுக்கு இரண்டு மாதங்கள் இடைக்கால ஜாமின் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமீன் தொகையாக ரூபாய் ஒரு லட்சம் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் முன் அனுமதி இன்றி மும்பையை விட்டு வெளியேறக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu