கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாக்ரமென்டோவில் அமைந்துள்ள குருத்வாராவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் இருவர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இது இனவாத வெறுப்பினால் நடந்த வன்முறை அல்ல என்றும், தனி நபர்களுக்கு இடையிலான மோதலில் நடைபெற்ற சம்பவம் என்றும், விசாரனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் காலிஸ்தான் பிரிவினை வாதிகளுக்கும் இந்தியர்களுக்கும் இடையிலான மோதல், அண்மை காலங்களில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், குருத்வாராவில் தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், இது பிரிவினைவாதிகளால் நடத்தப்பட்ட வன்முறை அல்ல; தனிநபர் வெறுப்பினால் நிகழ்ந்த வன்முறை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.














