பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதலில் 2 பாதுகாப்புப்படை வீரர்கள் பலி

October 29, 2024

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதலில் 2 பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டிய பாகிஸ்தானின் தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஜன்னடா பகுதியில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர். சம்பவத்திற்கு பிறகு, பாதுகாப்புப் படை வீரர்கள் அந்த பகுதியை சுற்றி தீவிரவாதிகளை தேடி வருகின்றனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு சம்பவத்தில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் அலிகேல் பகுதியில் உள்ள […]

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதலில் 2 பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டிய பாகிஸ்தானின் தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஜன்னடா பகுதியில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர். சம்பவத்திற்கு பிறகு, பாதுகாப்புப் படை வீரர்கள் அந்த பகுதியை சுற்றி தீவிரவாதிகளை தேடி வருகின்றனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு சம்பவத்தில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் அலிகேல் பகுதியில் உள்ள மசூதியில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த பாதுகாப்புப் படை வீரரை தீவிரவாதிகள் கடத்தியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu