அரபிக்கடல் - வங்கக்கடலில் 2 புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய நிபுணர் கணித்துள்ளார்.
அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அரபிக்கடலில் தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியில் வருகிற 5-ந்தேதி புயலாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. இதே போன்று வங்கக் கடலில் 9ந்தேதி புயல் உருவாவதற்கான வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை மைய நிபுணர் பிரதீப்ஜான் தெரிவித்தார்.
புயல் உருவாகும் நேரத்தில் தரைகாற்று அதிகமாக வீசுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை மைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.