இன்று இந்தியாவில் தெரியும் சூப்பர் மூன் நிகழ்வு

ஆடி மாத பௌர்ணமி தினமான இன்று, இந்தியாவில் சூப்பர் மூன் நிகழ்வு தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமிக்கு மிக அருகில் நிலவு வரும் நாட்கள் ‘சூப்பர் மூன்’ என அழைக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆகஸ்ட் மாதத்தில், 2 சூப்பர் மூன் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இது போன்ற நிகழ்வு 14 ஆண்டுகள் கழித்தே மீண்டும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த இரு சூப்பர் மூன் நிகழ்வுகளும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன. இன்றைய தினம், நிலவு, […]

ஆடி மாத பௌர்ணமி தினமான இன்று, இந்தியாவில் சூப்பர் மூன் நிகழ்வு தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமிக்கு மிக அருகில் நிலவு வரும் நாட்கள் ‘சூப்பர் மூன்’ என அழைக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆகஸ்ட் மாதத்தில், 2 சூப்பர் மூன் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இது போன்ற நிகழ்வு 14 ஆண்டுகள் கழித்தே மீண்டும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த இரு சூப்பர் மூன் நிகழ்வுகளும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன.

இன்றைய தினம், நிலவு, பூமியிலிருந்து 357530 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி, அடுத்த சூப்பர் மூன் நிகழ்வு நடைபெற உள்ளது. அப்போது, நிலவு, 357244 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். மேலும், அன்றைய தினம், அரிய நிகழ்வாக,‘ப்ளூ மூன்’ காட்சியளிக்கும். மேலும், இன்றைய சூப்பர் மூன் நிகழ்வு இந்தியாவிலும் காணக்கூடிய வகையில் நிகழ உள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu