ஆப்பிரிக்க நாட்டில் ராணுவ தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் பலியாகினர்.
ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா மற்றும் கேமரூனில் போகோ ஹராம் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு அந்நாட்டின் கல்விமுறையை தடை செய்வதற்காக அப்பாவி பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் மீது அடிக்கடி தாக்குதலில் ஈடுபடுகின்றனர். கேமரூன் நாட்டின் பகுதியில் பொதுமக்கள் மீது போகோ ஹராம் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ராணுவத்தினர் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி பயங்கரவாதிகளை விரட்டியடித்தனர். இதில் 2 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இந்த தாக்குதலில் உள்ளூர் காவல்துறையை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தார்.