20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இன்று இந்தியா- வங்காளதேச அணிகள் மோதுகின்றன.
20 ஒவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் ஆட உள்ளது. இதற்காக ரோஹித் தலைமையிலான இந்திய அணி இன்று பயிற்சி ஆட்டத்தில் தலைமையிலான வங்காளதேச அணியை எதிர் கொள்ள உள்ளது. மேலும் விராட் கோலி நேற்று தான் இந்திய அணியில் இணைந்தார். இதனால் அவர் உடனடியாக ஆடுவது என்பது உறுதி செய்யப்படவில்லை. மேலும் பயிற்சி ஆட்டத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடையாது என்பதால் 14 வீரர்களையும் மாற்றி மாற்றி பயன்படுத்தி கொள்ள அனுமதி உண்டு. மேலும் இதற்கு முன்னர் இந்திய அணி நியூயார்க்கில் விளையாடியதில்லை. எனவே அங்குள்ள சீதோஷ்ண நிலையை புரிந்து கொண்ட அதற்கு ஏற்ப தங்களை சீக்கிரம் மாற்றிக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும். அதன்படி இந்திய அணியில் ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப்சிங், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் விளையாட உள்ளனர்