தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. அதில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் உள்ளது.
ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியிலிருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. மேலும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிக அளவில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் தமிழகத்தில் கோடை வெயிலில் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.