ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் இலங்கையில் இருந்து விடுதலை

February 16, 2024

இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை கடந்த 3 ஆம் தேதி சிறைபிடித்தனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து 492 விசைபடகுகள் மூலம் 3500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்தனர். அதில் கடந்த மூன்றாம் தேதி கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 23 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகள் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்யப்பட்டன. மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் 23 […]

இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை கடந்த 3 ஆம் தேதி சிறைபிடித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து 492 விசைபடகுகள் மூலம் 3500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்தனர். அதில் கடந்த மூன்றாம் தேதி கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 23 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகள் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்யப்பட்டன. மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் 23 மீனவர்களும் இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டதில் 20 மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 பேரில் இருவருக்கு தலா ஆறு மாதம் சிறை தண்டனையும், மீதமுள்ள ஒருவருக்கு இரண்டாவது முறை எல்லை தாண்டி மீன்பிடித்ததால் ஓராண்டு சிறை தண்டனையும் விதைத்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu