தென் மாவட்டங்களுக்கு இன்று முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 80% பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் 20% பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன.
இன்று முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதுவரை தென் மாவட்டங்களுக்கு கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் அனைத்தும் இனி கிளம்பாக்கத்திலிருந்து இயக்கப்பட உள்ளன. இந்த நிலையில் வடசென்னை மக்களின் சிரமங்களை தவிர்ப்பதற்காக மாதவரத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 160 பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன. இதில் 80% பேருந்துகள் கிளாம்பக்கத்திலிருந்தும், 20% சதவீத பேருந்துகள் மாதவாரத்தில் இருந்தும் இயக்கப்பட உள்ளன. 30 நிமிடம் முதல் 1 மணி நேர கால இடைவெளியில் பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.