கடந்தாண்டில் நாடு முழுதும் 20 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் ஒவ்வாரு ஆண்டும் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட அளவிலான தகவல்கள் அறிக்கையாக தாக்கல் செய்யப்படுகிறது. இதன்படி, 2020 - 21ம் கல்வி ஆண்டுக்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கடந்தாண்டில் நாடு முழுதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன. இவைகளில் பெரும்பாலானவை தனியார் பள்ளிகள் ஆகும்.
மேலும்,ஆசிரியர்களின் எண்ணிக்கையும், 1.95 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டு, 14.89 லட்சம் பள்ளிகள் மூடப்பட்டன. நாடு முழுதும், 44 சதவீத பள்ளிகளில் மட்டுமே கம்ப்யூட்டர்கள் உள்ளன. 34 சதவீத பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி உள்ளது. 27 சதவீத பள்ளிகளில் மட்டுமே சிறப்பு குழந்தைகளுக்கான கழிப்பறை வசதி உள்ளது.
கொரோனாவுக்கு பிந்தைய காலம் என்பதால், மாணவர் சேர்க்கை வழக்கத்தை விட குறைவாகவே இருந்தது. ஆரம்ப பள்ளியில் இருந்து உயர் கல்விக்கு சென்ற மாணவர்களின் சதவீதம், 25.57 சதவீதமாக இருந்தது என்று அதில் கூறப்பட்டுள்ளது.














