நாகோர்னோ-கராபாக் என்பது தென் காகசஸில் உள்ள கராபாக் மலைத்தொடர்களுக்குள் நிலத்தால் சூழப்பட்ட பகுதி.இங்கு, அஜர்பைஜான் நடத்திய ஒரு நாள் ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு ஏற்பட்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கான நபர்கள் கொல்லப்பட்டதாக பிரிவினைவாத அதிகாரி ஒருவர் கூறினார்."குறைந்தது 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்" என்று சமூக ஊடகங்களில் அறிவித்தார்.
நேற்று மாலை ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் வீரர்கள் சிலர் கொல்லப்பட்டதாகவும், மற்றவர்கள் காயமடைந்ததாகவும் கூறினார்.














