பருவநிலை மாநாட்டில் 200 நாடுகள் ஒப்பந்தம்

December 14, 2023

துபாய் பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் சுமார் 200 நாடுகள் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டன. புதை படிம எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதை வலியுறுத்தி துபாயில் பருவநிலை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் சுமார் 200 நாடுகள் சேர்ந்து சிறப்புமிக்க ஒப்பந்தத்தை மேற்கொண்டன. கடந்த இரண்டு வாரங்களாக துபாயில் ஐநாவின் 28 வது பருவநிலை பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இதன் முடிவில் முதல் முறையாக எரிசக்திக்காக நிலக்கரி பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தும் சர்வதே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. புவி வெப்பமயமாதலை […]

துபாய் பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் சுமார் 200 நாடுகள் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டன.

புதை படிம எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதை வலியுறுத்தி துபாயில் பருவநிலை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் சுமார் 200 நாடுகள் சேர்ந்து சிறப்புமிக்க ஒப்பந்தத்தை மேற்கொண்டன. கடந்த இரண்டு வாரங்களாக துபாயில் ஐநாவின் 28 வது பருவநிலை பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இதன் முடிவில் முதல் முறையாக எரிசக்திக்காக நிலக்கரி பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தும் சர்வதே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸ்க்குள் கட்டுப்படுத்தும் வகையில் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக 8 அம்சங்கள் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எரிசக்திக்காக நிலக்கரியை அதிகமாக பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா மற்றும் சீனா உள்ளது. இவர்களுக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது. இந்நிலையில் பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம் அமல்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu