தென் அமெரிக்காவில் உள்ள உருகுவே நாட்டில் உள்ள கடற்கரை பகுதியில் 2000க்கும் மேற்பட்ட பென்குயின்கள் மர்மமான முறையில் இறந்துள்ளது.
தென் அமெரிக்காவின் கடற்பகுதியான உருகுவே என்னும் நாட்டில் உள்ள கடற்பகுதியில் கடந்த பத்து நாட்களில் மட்டும் 2000 பென்குயின் பறவைகள் இறந்திருக்கின்றன. இதற்கான காரணம் மர்மமான முறையில் இருப்பதாகவும் இந்த இறப்புக்கு பரவை ச்காய்ச்சல் நோய் காரணம் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இறந்துள்ள பறவைகள் அனைத்தும் மிக இளம் வயது கொண்டவை. அவை உருகுவே நாட்டின் கடற்கரை ஓரங்களுக்கு நீரோட்டங்களால் கொண்டு செல்லப்பட்டு இருக்கின்றன. இது தண்ணீரிலேயே ஏற்பட்டிருக்கும் இறப்பாகும். மேலும் இவ்வாறு ஏற்பட்டிருக்கும் இறப்பானது இயல்பானவை அல்ல என சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் தலைவர் கூறியுள்ளார்.
அதிகப்படியான மீன்பிடித்தல் மற்றும் சட்டவிரோதம் மீன்பிடித்தல் போன்ற காரணங்களே உயிரினங்களின் இறப்பிற்குக் காரணம் எனக் கூறுகின்றனர். அட்லாண்டிக் கடலில் ஒரு துணை வெப்பமண்டல சூறாவளி ஜூலை மாத நடுப்பகுதியில் தென்கிழக்கு பிரேசிலை தாக்கியதால் ஏற்பட்ட மோசமான வானிலையால் பலவீனமான உயிரினங்கள் இறந்திருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.
வ்














