2022 ல், டெல்லியில், 6 லட்சத்திற்கும் அதிகமான புதிய வாகனங்கள் விற்பனை

December 31, 2022

கடந்த இரண்டு ஆண்டுகளாக சரிந்து வந்த வாகன விற்பனை, 2022 ஆம் ஆண்டில் பன்மடங்கு உயர்வை சந்தித்துள்ளது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில், 6 லட்சத்திற்கும் அதிகமான புதிய வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 32% உயர்வாகும். டெல்லியில், 2022 ல் மொத்தமாக 605905 தனியார், பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக, மின்சார வாகனங்கள் விற்பனை 61150 எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10.1% […]

கடந்த இரண்டு ஆண்டுகளாக சரிந்து வந்த வாகன விற்பனை, 2022 ஆம் ஆண்டில் பன்மடங்கு உயர்வை சந்தித்துள்ளது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில், 6 லட்சத்திற்கும் அதிகமான புதிய வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 32% உயர்வாகும். டெல்லியில், 2022 ல் மொத்தமாக 605905 தனியார், பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக, மின்சார வாகனங்கள் விற்பனை 61150 எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10.1% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாத வாகன விற்பனை கணக்கிடப்படவில்லை. ஆனால், டெல்லியைப் பொறுத்தவரை டிசம்பர் மாதத்தில் குறைந்த அளவிலான வாகனங்களே விற்பனையாகும் என்று கருதப்படுகிறது. 2022 ஆம் ஆண்டின் வாகன விற்பனை பன்மடங்கு உயர்வை சந்தித்திருந்தாலும், கொரோனாவுக்கு முந்தைய 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், சற்று குறைவே ஆகும். கடந்து 2018 ஆம் ஆண்டு, டெல்லியின் வாகன விற்பனை 726830 ஆக உச்சத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu