2023-ம் ஆண்டு குடியரசு தின விழா :  அலங்கார ஊர்தி பற்றிய விவரங்களை அனுப்ப மத்திய அரசு உத்தரவு

September 28, 2022

2023-ம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு அலங்கார ஊர்தி பற்றிய விவரங்களை அனுப்ப மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவின் 74-வது குடியரசு தினம் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வழக்கமான நடைமுறைகளின்படி முப்படைகளின் அணிவகுப்பு, துணை ராணுவ படைகள், டெல்லி காவல்துறை ஆகியவற்றுடன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் அலங்கார அணிவகுப்பு இடம்பெறும். இந்த விழாவில் பங்கு கொள்வதற்காக, மத்திய அரசின் முக்கியமான துறை மற்றும் மாநில அரசுகளிடம் இருந்து […]

2023-ம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு அலங்கார ஊர்தி பற்றிய விவரங்களை அனுப்ப மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவின் 74-வது குடியரசு தினம் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வழக்கமான நடைமுறைகளின்படி முப்படைகளின் அணிவகுப்பு, துணை ராணுவ படைகள், டெல்லி காவல்துறை ஆகியவற்றுடன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் அலங்கார அணிவகுப்பு இடம்பெறும். இந்த விழாவில் பங்கு கொள்வதற்காக, மத்திய அரசின் முக்கியமான துறை மற்றும் மாநில அரசுகளிடம் இருந்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு பல விண்ணப்பங்கள் அனுப்பப்படும்.

அந்த விண்ணப்பத்தில் ஊர்திகளில் பயன்படுத்தப்படவுள்ள தீம், கலை வடிவம், கலாசாரம், வண்ணப்படங்கள், இசை, வடிவமைப்பு, நடன அமைப்பு உள்ளிட்ட பல விவரங்கள் இருக்கும். அதை அடிப்படையாக வைத்து அவை தேர்ந்தெடுக்கப்படும். அணிவகுப்பில் இடம்பெற இறுதி செய்யப்பட்டுள்ள மாநிலங்கள், மத்திய பாதுகாப்புத் துறை கொடுக்கக்கூடிய இடத்தில் தங்களின் வாகனங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுவார்கள்.

இதில் வாகனங்களின் அலங்காரமானது, மத்திய அரசின் துறைகள் குறித்தும், அவற்றின் மாற்றங்களை விளக்கும் வகையிலும் அமையும். அதோடு மாநில அரசின் கலாசாரம், பண்பாடு மற்றும் அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலும் வடிவமைக்கப்படும். இந்த அணிவகுப்பில் பங்குபெறும் வாகனங்களில் சிறந்தவை எவை என்ற அடிப்படையில் 3 பரிசுகள் வழங்கப்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu