இலங்கையில் நிகழாண்டு இறுதிக்குள் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டின் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார். மேலும், அதிபர் தேர்தல் நவம்பர் மாதத்தில் நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார். அதே சமயத்தில், வரும் 2025 ஆம் ஆண்டு இலங்கை நடப்பு நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நிறைவடைகிறது. அந்நாட்டின் சட்டப்படி, அதிபர் விரும்பினால் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை முன்கூட்டியே அறிவிக்கலாம். அந்த வகையில், அதிபர் தேர்தலுடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலும் நடத்தப்படலாம் என சொல்லப்பட்டு வந்தது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, 2024 ல், அதிபர் தேர்தல் மட்டுமே நடைபெறும் என ரணில் விக்கிரமசிங்கே தெளிவு படுத்தி உள்ளார்.