2024-ம் ஆண்டில் அமெரிக்கா சென்று பணி செய்வதற்கு வழங்கப்படும் எச்1பி விசாவுக்கான முன்பதிவு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், விசா விண்ணப்பதாரர்கள் 10 டாலர் கட்டணம் செலுத்தி, பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா வழங்கும் விசாக்களில், 70% புதிய விசாக்கள் எச் 1 பி விசாக்கள் ஆகும். இதன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் அமெரிக்காவில் பணி செய்ய செல்கின்றனர். ஆனால், நடப்பாண்டில் பணிநீக்கங்கள் கடுமையாக உள்ளதால், விசா எண்ணிக்கை குறையும் என்று கூறப்படுகிறது. அமெரிக்க கஜானா, விசா பதிவு காலத்தில், தினசரி பரிவர்த்தனை வரம்பை 24999.99 முதல் 39999.99 வரை உயர்த்தி அறிவித்துள்ளது. மேலும், விசா செயல்முறைகள் குறித்த இதர விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.