2024 தொடக்கம் முதல் சரிந்து வரும் பங்குச் சந்தை

January 3, 2024

2024 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து இந்திய பங்குச் சந்தையில் சரிவு காணப்படுகிறது. நேற்று சரிவுடன் நிறைவடைந்த பங்குச் சந்தை இன்று மேலும் சரிவை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நாளின் இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 535.88 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 71356.6 புள்ளிகளாக உள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 148.46 புள்ளிகளை இழந்து, 21517.35 புள்ளிகளாக உள்ளது. இன்றைய வர்த்தகத்தில், அதானி எண்டர்பிரைசஸ், […]

2024 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து இந்திய பங்குச் சந்தையில் சரிவு காணப்படுகிறது. நேற்று சரிவுடன் நிறைவடைந்த பங்குச் சந்தை இன்று மேலும் சரிவை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நாளின் இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 535.88 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 71356.6 புள்ளிகளாக உள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 148.46 புள்ளிகளை இழந்து, 21517.35 புள்ளிகளாக உள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், அதானி எண்டர்பிரைசஸ், பஜாஜ் ஆட்டோ, இன்டஸ் இன்ட் வங்கி, ஐடிசி, அதானி போர்ட்ஸ், சிப்லா, ஏர்டெல், ஐ சி ஐ சி ஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, என்டிபிசி ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், ஹிண்டால்கோ, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், எல்டிஐ மைண்ட் ட்ரீ, இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, எச்டிஎப்சி வங்கி போன்றவை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu