அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சீசன் கடைசி கிராண்ட்சிலாம் போட்டி இன்று தொடங்குகிறது
ஒவ்வொரு ஆண்டும் 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டின் பிரெஞ்சு ஓபன் மற்றும் விம்பிள்டன் பட்டங்களை அல் காரஸ் (ஸ்பெயின்) வென்றார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை சின்னர் (இத்தாலி) கைப்பற்றினார். பெண்கள் பிரிவில் சபலென்கா (பெலாரஸ்) ஆஸ்திரேலிய ஓபன், இகா ஸ்வியாடெக் (போலந்து) பிரெஞ்சு ஓபன், மற்றும் பார்பரா கிரஜ்கோவா (செக் குடியரசு) விம்பிள்டன் பட்டங்களை வென்றனர். ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன், நியூயார்க் நகரில் இன்று (26-ந்தேதி) தொடங்கும் மற்றும் செப்டம்பர் 8-ந் தேதி வரை நடைபெறும். இதில், ஜோ கோவிச் (செர்பியா), அல்காரஸ் (ஸ்பெயின்), அலெக் சாண்டர் ஸ்வரேவ் (ஜெர்மனி), மெட்வதேவ், ரூப் லெவ் (ரஷியா) போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள். ஜோ கோவிச் 24 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்று சாதனை படைத்தார், 25-வது பட்டத்திற்காக அவர் எதிர்பார்க்கிறார். பெண்கள் பிரிவில், இகா ஸ்வியாடெக், சபலென்கா, ரைபகினா, கோகோ கவூப் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.