2025-26 கல்வியாண்டு தேர்வு அட்டவணை – பொதுத்தேர்வு தேதிகள் அக்டோபரில் அறிவிப்பு

காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு தேதிகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 2025-26 கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபரில் வெளியிடப்படும் என கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பின்படி, 1 முதல் 12ஆம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 18 முதல் 26 வரை நடைபெறுகிறது. இதற்குப் பின்னர் செப்டம்பர் 27 முதல் 30 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 15 முதல் 23 வரை நடைபெறவுள்ள நிலையில், டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 […]

காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு தேதிகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 2025-26 கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபரில் வெளியிடப்படும் என கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பின்படி, 1 முதல் 12ஆம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 18 முதல் 26 வரை நடைபெறுகிறது. இதற்குப் பின்னர் செப்டம்பர் 27 முதல் 30 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 15 முதல் 23 வரை நடைபெறவுள்ள நிலையில், டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தயார் செய்யுமாறு அவர் தனது எக்ஸ் தளத்தில் அறிவுறுத்தியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu