கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 206 போலீசார்கள் இடமாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பணியாற்றும் போலீசார் 206 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் ஐந்து போலீஸ் உட்கோட்டங்கள் உள்ளன.அதன்படி கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, பர்கூர், ஊத்தங்கரை ஆகியவை செயல்பட்டு வருகின்றன. அதில் கிருஷ்ணகிரி உட்கோட்டத்தில் மொத்தம் ஏழு போலீஸ் நிலையங்களும், ஓசூர் உட்கோட்டத்தில் எட்டு போலீஸ் நிலையங்களும், தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில் மொத்தம் ஆறு போலீஸ் நிலையங்களும், பர்கூர் உட்கோட்டத்தில் ஐந்து போலீஸ் நிலையங்களும், ஊத்தங்கரை உட்கோட்டத்தில் ஐந்து போலீஸ் நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இவை […]

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பணியாற்றும் போலீசார் 206 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் ஐந்து போலீஸ் உட்கோட்டங்கள் உள்ளன.அதன்படி கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, பர்கூர், ஊத்தங்கரை ஆகியவை செயல்பட்டு வருகின்றன. அதில் கிருஷ்ணகிரி உட்கோட்டத்தில் மொத்தம் ஏழு போலீஸ் நிலையங்களும், ஓசூர் உட்கோட்டத்தில் எட்டு போலீஸ் நிலையங்களும், தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில் மொத்தம் ஆறு போலீஸ் நிலையங்களும், பர்கூர் உட்கோட்டத்தில் ஐந்து போலீஸ் நிலையங்களும், ஊத்தங்கரை உட்கோட்டத்தில் ஐந்து போலீஸ் நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இவை தவிர ஓசூரில் மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இவற்றில் மொத்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றன. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பணியாற்றி வரும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர், ஏட்டு, போலீஸ் என பல நிலைகளில் பணியாற்ற கூடிய 206 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கும் பொழுது போலீசாரின் குடும்ப சூழ்நிலை, இடமாறுதல் கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu