இந்தியாவின் முதல் புல்லட் ரயில் 21 கிலோ மீட்டர் தொலைவுக்கு தண்ணீருக்குள் பயணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ராவின் மும்பையில் இருந்து குஜராத்தின் அகமதாபாத் வரை புல்லட் ரயிலை இயக்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஜப்பானின் ஷின்கான்சென் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், ரூ.1.08 லட்சம் கோடி மதிப்பில் இந்தத் திட்டம் நடைபெற்று வருகிறது. இன்னும் 4 ஆண்டுகளில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்த ரயில் மகாராஷ்டிராவின் தானே பகுதியை ஒட்டி 21 கிலோ மீட்டர் தொலைவுக்கு தண்ணீருக்குள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் தண்ணீருக்குள் பயணிக்கும் அனுபவத்தை பயணிகள் பெற முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.