ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற 2250 கிராம செவிலியர் நியமிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் சுகாதார மையங்களில் காலிப் பணியிடங்கள் ஏராளமாக உள்ளன. இது தவிர மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கும் செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக 2250 கிராம செவிலியர்கள் தேர்ந்தெடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி மருத்துவ சேவை ஆட்சேர்ப்பு வாரியம் துணைசெவிலியர், கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் ரூபாய் 19500 ஊதிய விகிதத்தில் நேரடி ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க இம்மாதம் 31ஆம் தேதிக்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். வயது, கல்வி தகுதி ஆகிய பிற நிபந்தனைகள் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 13.10.2023 அன்று கலந்தாய்வு முறையில் மூப்பு நிலை மற்றும் சுழற்சி மூலம் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு செவிலியர்கள் ஒப்பந்த முறையில் பணியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.