41 சீன மக்களை ஏற்றிச் சென்ற படகு கம்போடியா கடற்கரையில் கவிழ்ந்தது. அதிலி௫ந்து 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
41 சீன மக்களை ஏற்றிச் சென்ற படகு சிஹானூக்வில்லே எனும் இடத்தில் சிக்கியதாக அப்பகுதியின் செய்தித் தொடர்பாளர் கியாங் ஃபெரோம் கூறினார். மேலும் அதில் இருந்தவர்களில் 18 பேர் மட்டுமே மீட்கப்பட்டனர் என்றும் ௯றினார். சிஹானூக்வில்லே பகுதியில் சீனத் தொழிலாளர்கள் சட்டவிரோத வேலை செய்வதற்காக கடத்தப்படுவது பற்றிய செய்திகள் அதிகரித்து வருகின்றன. இதற்கிடையில் மற்றவர்களை தேடும் பணி நடைபெ௫கிறது. அதே சமயம் காப்பாற்றப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கியாங் ஃபெரோம் கூறினார்.
இது குறித்து ௯றய அதிகாரி, காணாமல் போன 23 பே௫ம் குவாங்டாங் துறைமுகத்தில் இருந்து வேகப் படகு மூலம் சீனாவை விட்டு வெளியேறியதாக விசாரணையில் தெரியவந்தது. பின் அந்த கப்பல் பழுதடைந்து நீரில் மூழ்கத் தொடங்கியது. பின்னர் அதிலி௫ந்தவர்கள் இரண்டு கம்போடிய பணியாளர்களுடன் சர்வதேச கடற்பகுதியில் ஒரு மரப் படகிற்கு மாற்றப்பட்டனர் என்று ௯றப்பட்டது. எனவே கியாங் ஃபெரோம் ௯றியதன் அடிப்படையில், இரண்டு கம்போடியர்களும் விசாரணைக்காக போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.














