23-ந்தேதி முதல் ஆண்கள் சுய உதவிக்குழு திட்டம் தொடக்கம் - பசவராஜ் பொம்மை 

March 20, 2023

23-ந்தேதி முதல் ஆண்கள் சுய உதவிக்குழு திட்டம் தொடங்கப்படும் என்று பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். இதுகுறித்து பசவராஜ் பொம்மை கூறுகையில், கர்நாடகத்தில் மகளிர் சுயஉதவி குழுக்கள் நீண்ட காலமாக செயல்பட்டு வருகின்றன. அதே போல் இளைஞர்களுக்காக சுவாமி விவேகானந்தா இளைஞர் சக்தி ஆண்கள் சுயஉதவி குழுக்களை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கப்படும். இந்த குழுக்கள் வெற்றிகரமாக செயல்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இந்த குழுக்கள் தொழில் செய்ய வங்கிகளில் கடன் […]

23-ந்தேதி முதல் ஆண்கள் சுய உதவிக்குழு திட்டம் தொடங்கப்படும் என்று பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பசவராஜ் பொம்மை கூறுகையில், கர்நாடகத்தில் மகளிர் சுயஉதவி குழுக்கள் நீண்ட காலமாக செயல்பட்டு வருகின்றன. அதே போல் இளைஞர்களுக்காக சுவாமி விவேகானந்தா இளைஞர் சக்தி ஆண்கள் சுயஉதவி குழுக்களை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கப்படும். இந்த குழுக்கள் வெற்றிகரமாக செயல்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இந்த குழுக்கள் தொழில் செய்ய வங்கிகளில் கடன் பெற்று கொடுக்க வேண்டும். அந்த குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன் அளிக்க அரசு உத்தரவாதம் அளிக்கிறது. அவர்களின் தொழில் அதிக வருவாய் ஈட்டும் நிலை இருந்தால் அத்தகைய குழுக்களுக்கு கூடுதல் கடன் கிடைக்கவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இந்த ஆண் சுயஉதவி குழுக்கள் திட்டம் வருகிற 23-ந் தேதி தொடங்கப்படுகிறது. மேலும் ஒரு கிராம பஞ்சாயத்திற்கு தலா 2 குழுக்கள் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu