அடுத்த கல்வியாண்டுக்கான ஆசிரியர் மாறுதல் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கலந்தாய்வில் ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்றனர், இதில் பலர் தங்கள் விருப்பத்திற்கேற்ப இடமாற்றம் பெற்றுள்ளனர்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள் பொதுவான மாறுதல் கலந்தாய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளிலிருந்து மொத்தம் 11,163 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் 2,388 பேர் தங்கள் விருப்பமான பள்ளிகளில் பணியாற்ற இடமாற்ற ஆணையைப் பெற்றனர். பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.














