தேசிய பாரா தடகள போட்டிகள் - சென்னையில் இன்று தொடக்கம்

February 18, 2025

23-வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் சென்னையில் ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. தமிழக அரசின் ஆதரவுடன் முதல் முறையாக சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டியில் 1,476 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். 30 அணிகளைச் சேர்ந்த அவர்கள் 155 பிரிவுகளில் களமிறங்குகின்றனர். உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், சக்கர நாற்காலி ரேசிங் உள்ளிட்ட பிரிவுகளில் டி.மாரியப்பன், சுமித் அன்டில், மனோஜ் சபாபதி, மனோஜ் சிங்கராஜ், முத்து ராஜா, ஹகாடோ செமா, […]

23-வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் சென்னையில் ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. தமிழக அரசின் ஆதரவுடன் முதல் முறையாக சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டியில் 1,476 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். 30 அணிகளைச் சேர்ந்த அவர்கள் 155 பிரிவுகளில் களமிறங்குகின்றனர். உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், சக்கர நாற்காலி ரேசிங் உள்ளிட்ட பிரிவுகளில் டி.மாரியப்பன், சுமித் அன்டில், மனோஜ் சபாபதி, மனோஜ் சிங்கராஜ், முத்து ராஜா, ஹகாடோ செமா, நவ்தீப் சிங், யோகேஷ் கதுனியா உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.

இந்தப் போட்டி புதிய சாதனைகள் உருவாகும் தருணமாக இருக்கும் என பாராலிம்பிக் கமிட்டி தலைவா் தேவேந்திர ஜஜாரியா தெரிவித்துள்ளார். போட்டி குறித்து தமிழ்நாடு பாரா விளையாட்டு சங்கத் தலைவர் சந்திரசேகர் ராஜன், ‘தமிழ்நாடு அரசின் ஆதரவுடன் இப்போட்டி நடைபெறுவதால் பாரா விளையாட்டுகளுக்கான தேசிய முக்கியத்துவம் மேலும் வலுப்பெறும். திறமைகளை வெளிக்காட்டுவதற்கும், பாரா விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்கும் இது ஒரு மிகப்பெரிய மேடையாக இருக்கும்’ எனக் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu