விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், 24 மணி நேரம் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்பது முதலமைச்சரின் உத்தரவாக உள்ளது. மின் பகிர்மானத்திற்கான அடிப்படை கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணி முடிந்ததும் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார். மேலும், சிவகங்கை தொகுதியில் 3,232 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மற்ற கோரிக்கை குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலிக்கப்படும் என்றார்.